வவுனியா நகரப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக வியாபாரம் மேற்கொண்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை
வவுனியா நகரப் பகுதியில் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வீதியோர வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களுக்கு எதிராக நகரசபையால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவிட் -19 தாக்கத்தைக் கருத்திற்கொண்டு வவுனியா நகரசபையினரினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரப் பகுதியில் வீதியோர வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு நகரசபையினரினால் தடை விதிக்கப்பட்ட நிலையில் நகரசபையின் தடையுத்தரவினை மீறி போக்குவரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வீதியோர நடவடிக்கையில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக நகரசபையினர் விசேட நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.
இதன் போது போக்குவரத்திற்கு இடையூறாக வீதியோரத்தில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நபர்களின் மரக்கறிகள் பொருட்களை நகரசபையினர் ஏற்றிச்சென்றதுடன், அவர்களுக்குத் தண்டப்பணமும் விதித்துள்ளனர்.
வீதியோரத்தில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டவர்களின் மரக்கறிகள் பல பாவனைக்கு
ஒவ்வாத வகையில் அழுகிய நிலையிலும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


