அதிவேக வீதியில் வாகனம் நிறுத்தியோருக்கு எதிராக நடவடிக்கை
மே தின பேரணிக்கு செல்லும் வழியில் அதிவேக வீதியில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிவேக வீதியின் பொலிஸ் ரோந்துப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ், அவசர நிலைமைகளை தவிர அதிவேக வீதியின் பக்கங்களில் வாகனம் நிறுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
ஆபத்து தடுப்பு, பொலிஸ் உத்தரவுகள், வாகனம் பழுதடைதல் அல்லது விபத்துகள் உள்ளிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே அதிவேக வீதியின் பக்கங்களில் வாகனங்களை நிறுத்த முடியும்.
சட்ட நடவடிக்கை
இந்நிலையில், நேற்றையதினம் மே தின பேரணிகளுக்குச் செல்லும் பேருந்துகள், அதிவேக வீதியில் நிறுத்தப்பட்டுள்ளதையும், பயணிகள் வீதியோரத்தில் மதிய உணவு உட்கொள்வதையும் காட்டும் காணொளி வெளியாகியுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையிலேயே நிறுத்தப்பட்ட பேருந்துகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri
