போலித் தகவல்களைப் பரப்பியவர்களுக்கு எதிராக நடவடிக்கை! - சபையில் ஜயந்த கெட்டகொட வலியுறுத்து
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்திப் போலித் தகவல்களைப் பரப்பியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட, சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்குச் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போது சிறப்புரிமை பிரச்சினையொன்றை எழுப்பி மேற்படி கோரிக்கையை ஜயந்த கெட்டகொட எம்.பி. முன்வைத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் திரவப்பால் கோரி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேயாட்டம் ஆடினர் எனப் பத்திரிகைகளிலும், இணைய ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. அவ்வாறானதொரு சம்பவம் நடைபெறவில்லை.
இப்படியான சம்பவத்தால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயருக்குக் களங்கம் ஏற்படுகின்றது. எனவே. இது தொடர்பில் விசாரணை நடத்தி, போலித் தகவல்களைப் பரப்பியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" இவ்வாறு குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையை மூடினால், எங்களுக்கு வீட்டிலிருந்து உணவு எடுத்து வந்து சாப்பிடலாம் என்ற யோசனையையும் அவர் முன்வைத்தார்.
இதற்குப் பதிலளித்த சபாநாயகர்,
"தவறான செய்தி வெளியானதையிட்டு கவலை அடைகின்றேன். ஊடக சுதந்திரம் தவறாகப்
பயன்படுத்தப்படக்கூடாது. இப்பிரச்சினை சிறப்புரிமைக்குழுவுக்கு வழங்கப்படும்" என கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam