விழாக்கள், கொண்டாட்டங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை
விழாக்கள், கொண்டாட்டங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுச் சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன (Upul Rohana) இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாது திருமண நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள், கொண்டாட்டங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார வழிகாட்டல்கள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையிலும் சிலர் நாள் தோறும் பல்வேறு நிகழ்வுகளை நடாத்த அனுமதி கோரி பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் ஆவணங்களை சமர்ப்பித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது நாட்டில் கோவிட் பெருந்தொற்று நிலைமை நீங்கிவிடவில்லை எனவும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு பொதுமக்களிடம் கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri