இடமாற்றலாகி செல்லாது உள்ள ஆசிரியர்களுக்கு நடவடிக்கை என்ன..! கேள்வி எழுப்பும் கல்விப் பணிப்பாளர்
இடமாற்றம் வழங்கியும் குறித்த பாடசாலைக்கு செல்லாத ஆசிரியர்களுக்கு என்ன நடவடிக்கை எடுப்பது என வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் அன்னமலர் சுரேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வவுனியா தெற்கு வலய ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது
மேலும் தெரிவித்ததாவது, வவுனியா தெற்கு வலயத்தில் ஆசிரியர் இடம்மாற்றம் தொடர்பாக பேசப்பட்டது.
செட்டிகுளத்திற்கும், நகரப் பாடசாலைகளுக்கும் இடையில் பெரியளவில் வித்தியாசம் இல்லை. இருக்கின்ற ஆசிரியர்களை பகிர்ந்து வழங்கியுள்ளோம்.
இடமாற்றம் என்பது இடமாற்ற சபை ஊடாக மேற்கொள்ளப்படுகிறது. அதிகாரியோ அல்லது வலயக் கல்விப் பணிப்பாளரோ அதனை மேற்கொள்ளவில்லை.
தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இடமாற்ற சபையில் இடமாற்றம் செய்யப்படும். மேன் முறையீட்டு சபையிலும் தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னர் அதனை செயற்படுத்தாத ஆசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை இல்லை.
அவர்கள் செல்லாது விட்டால் வலயக் கல்விப் பணிப்பாளரால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது.
அதற்கு என்ன தீர்வு என்று சொன்னால் செய்ய முடியும். அந்த தீர்வை வரையறுத்து தந்தால் நாம் நடவடிக்கை எடுப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 1 மணி நேரம் முன்

புதிய சீரியலில் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ள பிக்பாஸ் புகழ் வினுஷா... எந்த டிவி தொடர் தெரியுமா? Cineulagam

ரஷ்யாவில் கொல்லப்பட்ட வட கொரிய வீரர்கள் குடும்பங்களுக்கு... கிம் ஜோங் உன் அளித்த உறுதி News Lankasri

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri
