இலங்கை வந்த வெளிநாட்டு தம்பதியின் கொடூரமான செயல்
இலங்கைக்கு சுற்றுலா விசாவில் இலங்கை வந்துள்ள வெளிநாட்டு தம்பதி ஒன்று மிகவும் மோசமான செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
காலி, உனவட்டுன பிரதேசத்தில் சுற்றுலாவில் ஈடுபட்டிருந்த தம்பதியையும் அவர்களின் நாயையும், குறித்த வெளிநாட்டு தம்பதி கொடூரமாக தாக்கியுள்ளனர்.
குறித்த வெளிநாட்டவர்கள் செல்லும் போது நாய் குரைத்தமையினால் கோபமடைந்த நாயையும் வீட்டு உரிமையாளரையும் தாக்கியுள்ளனர்.
வெளிநாட்டு தம்பதி
இது தொடர்பில் கேட்க சென்ற நாயின் உரிமையாளரை கற்களால் தாக்கியதால் அவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்கியதன் பின்னர் எங்களை ஒன்றும் செய்ய முடியாது நாங்கள் உக்ரைனியர்கள் என அந்த தம்பதி கூறிவிட்டு சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் முழுமையாக காணொளியாக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri