அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கைக்கு எதிரான நடவடிக்கைக்கு தயாராகும் தொழிற்சங்க கூட்டமைப்பு
அரசாங்கத்தின் புதிய வரி கொள்கைக்கு எதிரான நடவடிக்கை குறித்து ஆலோசிக்க நாளை செவ்வாய்க்கிழமை தீர்க்கமான கூட்டம் நடைபெறவுள்ளதாக தொழில் வல்லுநர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், துறைமுகங்கள், மின்சாரம், நீர் வழங்கல், வங்கிகள், பெற்றோலியம் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் உட்பட 40 தொழிற்சங்கங்கள் இந்த தொழிற்சங்க கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.
அநீதியான வரிக் கொள்கை
அரசாங்கத்தின் அநீதியான வரிக் கொள்கைக்கு எதிராக குரல் கொடுக்கும் எதிர்க்கட்சிகளும், இந்த் தீர்க்கமான கூட்டத்தில் பங்கேற்கவிருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதிக்கு பின்னர் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது தொடர்பில் இந்த சந்திப்பின் போது இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என விஜேசிங்க தெரிவித்துள்ளார்.




