இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் - நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய சட்டமூலம்
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தைச் சீரமைக்கவும், அங்குள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் நோக்கமாகக் கொண்ட புதிய சட்டமூலம் ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார் கமகே தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த பத்தாண்டுகளில் புதிய வீரர்களை உருவாக்குவதில் போதிய கவனம் செலுத்தப்படாததால் வீரர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
ஓரிரு மாதங்களிலேயே வீரர்களை உருவாக்கிவிட முடியாது
அதன் விளைவாகப் போட்டிகளில் தோல்விகள் நிகழ்ந்துள்ளன. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் ஓரிரு மாதங்களிலேயே வீரர்களை உருவாக்கிவிட முடியாது.

நிர்வாகக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அடிமட்ட நிலையிலிருந்தே வீரர்களை உருவாக்கும் பொறிமுறை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
இச்செயல்முறை முழுமையடையச் சிறிது காலம் பொறுமை தேவைப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri