குமுழமுனை மகாவித்தியாலயத்தில் கௌரவிக்கப்பட்ட தரம் - 5 புலமைப் பரிசில் சாதனையாளர்கள்
மு/குமுழமுனை மகாவித்தியாலயம் தொடர்ந்து கல்விப்புலத்தில் சாதனைகளை செய்து வருகின்றது. தரம் 01 இல் இருந்து உயர்தரம் வரை நான்கு கற்றல் கற்பித்தலை நிகழ்த்தும் இந்த பாடசாலை குமுழமுனை மற்றும் அதனை அண்டிய அயல் கிராம மக்களுக்கு அளப்பரிய கல்விச்சேவையினை செய்து வருவதாக மக்களால் பாராட்டப்படுகின்றது.
தரம் - 5 மாணவர்களின் 2023 ஆம் ஆண்டுக்கான பிரிவினர் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று சாதனை படைத்து இருந்தனர்.
எட்டு மாணவர்கள்
எட்டு மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று வெற்றி பெற்றிருந்தனர்.2023 ஆம் ஆண்டுக்கான முல்லைத்தீவு மாவட்ட தமிழ்மொழி மூல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி 145 என்பதும் குறிப்பிடத்தக்கது.
01) விஜிதன் பிருத்திகா (168)
02) தமிழின்பன் அனோஜ் (162)
03) சுபாஸ்கரன் ருபிசன் (162)
04) பவானந்தன் பிரித்திகா (160)
05) சிவா ஆதித்தியா (159)
06) சிவராஜன் திசானி (159)
07) சசிகரன் அஸ்வினி (152)
08) தமிழ்வாசன் அஸ்விதன் (145)
ஆகிய எட்டு மாணவர்களும் பெற்றோர், கல்விசார் அதிகாரிகள்,பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், அதிபர், மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டு பாடசாலை அதிபர் திரு ஜெயவீரசிங்கம் அவர்களின் தலைமையில் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
பாடசாலையின் நிகழ்வு மண்டபத்தில் 20.02.2024 அன்று தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாணவர்களுக்கான பரிசில்களை முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் கவாஸ்கர் வழங்கியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






