ஆராய்ச்சியை நாசப்படுத்தியதாக நிபுணர் மீது குற்றச்சாட்டு
வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் பங்கசு குறித்த நிபுணர் ஒருவரின் கீழ்த்தரமான நடவடிக்கையால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளின் மாதிரிகள் அப்புறப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவையின் சிரேஷ்ட தொழிற்சங்க தலைவர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் வைத்திய ஆராய்ச்சிப் பிரிவின் பங்கசு குறித்த நிபுணர் மூன்று வாரங்களுக்கும் மேலாக ஆய்வகத்தின் பணிகளைச் சீர்குலைத்து, வைத்திய ஆய்வக விஞ்ஞானிகளை தங்கள் பணிகளைச் செய்யவிடாமல் தடுத்து வருவதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் கூறியுள்ளது.
"அனைத்து பங்கசு தொற்றுகளையும் பரிசோதிக்கும் நாட்டில் உள்ள ஒரே ஆய்வகம் இதுவாகும், மேலும் இந்த இடையூறு காரணமாக, சுமார் ஆயிரம் நோயாளிகளால் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட மாதிரிகள் அகற்றப்பட வேண்டியிருந்தது.
" பங்கசு நோய்களின் சில மாதிரிகளைப் பெறுவது மிகவும் கடினம் எனவும், பங்கசு தொற்றுக்கான சிகிச்சையை தாமதப்படுத்துவது பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையை வீணடிக்கும் எனவும், சிகிச்சையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு வழிவகுக்கும் எனவும் கூறியுள்ள சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் இது நோயாளிகளின் மரணத்திற்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த பிரிவு ஏழு வைத்திய ஆய்வக விஞ்ஞானிகளைப் பயன்படுத்துவதோடு அதன் சில அதிகாரிகளை சதித்திட்டத்தால் நீக்கியதால் ஏற்பட்ட ஊழியர் பற்றாக்குறையை நிரப்ப விமான நிலையத்தின் மூலக்கூறு ஆய்வகத்தில் இருந்து இரண்டு மேலதிக அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
இத்துறையில் ஆய்வக விஞ்ஞானிகளுக்கு பற்றாக்குறை இருந்தபோதிலும், தற்போதுள்ள சோதனைகளை மேற்கொள்வதற்கான பொறுப்பை அதிகாரிகள் நிறைவேற்றி வருகின்றனர்.
எவ்வாறெனினும் நிபுணத்துவ வைத்தியரின் இடையூறு மற்றும் சுகாதார அமைச்சின் தவறான நடத்தையை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் மூன்று வாரங்களாக இந்த பிரிவில் எவ்வித பரிசோதனையும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ரவி குமுதேஷ் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு இதுவரை சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் ஆய்வக சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஆகியோரிடம் இது தொடர்பில் கலந்துரையாடுமாறு பல தடவைகள் கோரியிருந்த போதிலும், விசேட வைத்தியர்கள் மீதான அச்சத்தினால் அவர்கள் அதனைச் செய்யத் தயங்குகின்றனர்.
வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளருன்னு நிலைமையினை கட்டுப்படுத்த எவ்வித இயலுமையும் இல்லாத நிலையில், விசேட வைத்தியரின் குழப்பமான மனநிலையால் ஒட்டுமொத்த சேவையும் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாகவும் நோயாளிகளின் தேவைகள் பொறுப்பற்ற முறையில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் ரவி குமுதேஷ் குற்றம் சாட்டுகிறார்.
இந்த நிலை காரணமாக, கொவிட் நோயாளிகளின் உயிர்வாழ்விற்கான மிக முக்கியமான சோதனையான “கிளாக்டோமெனன்” சோதனைக்கு சமர்ப்பிக்கப்பட்ட 300ற்கும் மேற்பட்ட மாதிரிகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என்பதோடு, மேலும் நோயாளிகள் கண், முதுகெலும்பு, முழங்கால் மற்றும் உள் உறுப்புகளில் வலிமிகுந்த சத்திர சிகிச்சை மூலம் பெறப்பட்ட சுமார் 1000 மாதிரிகள் வீணாகியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்து.
சுகாதாரப் பாதுகாப்பு வேலைநிறுத்தங்களின் போது கூட, அந்த சோதனைகளில் தலையிடாத வகையில், தன்னார்வ சேவைகளை வழங்குவதன் மூலம் நோயாளிகள் பாதுகாக்கப்படும் சூழ்நிலையில், ஒரு விசேட வைத்தியரின் மனப்பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் இவ்வாறு நோயாளிகள் பாதிப்பினை எதிர்நோக்குவது சுகாதார அமைச்சின் கட்டுப்பாடுகள் குறித்த பலவீனத்திற்கு சிறந்த உதாரணம் என சுகாதார நிபுணர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் கூறியுள்ளார்.
இப்பிரிவில் பணிபுரியும் வைத்திய ஆய்வக விஞ்ஞானிகளுக்கு விசேட வைத்தியரால்
தங்கள் பணிகளைச் செய்ய இடையூறு ஏற்பட்டால், அவரது உதவியுடனோ அல்லது இல்லாமலோ
இந்த பணிகளை மேற்கொள்வதற்கான பொறுப்பை அவர்கள் ஏற்க முடியுமான இயலுமை
இருக்கின்ற நிலையில், எவ்வித திறனாய்வும் இன்றி, சுகாதார அமைச்சின் அதிகாரிகள்
அவர்களின் "இனம் மற்றும் நண்பர்களை பாதுகாக்கும் கொள்கை" காரணமாக மக்களின்
பாதுகாப்பு மற்றும் தேவை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ரவி குமுதேஷ் மேலும் தனது
அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
