ஷானி அபேசேகரவிற்கு இயற்கை மரணத்தை ஏற்படுத்த முயற்சி: சஜித் குற்றச்சாட்டு
குற்ற விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு இயற்கை மரணத்தை ஏற்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
திட்டமிட்ட அடிப்படையில் ஷானி இயற்கையாகவே மரணிக்கச் செய்ய முயற்சிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஷானி அபேசேகரவின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஷானி விவகாரத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் கோழைத்தனமானவை எனவும், வெட்கப்பட வேண்டியவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திட்டமிட்ட அடிப்படையில் இயற்கையாகவே மரணிக்கச் செய்யும் வகையிலான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக ரணில் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, ஷானி அபேசேகரவை பழிவாங்குவதாகவும், இயற்கையாக மரணிக்கச் செய்ய சூழ்ச்சி செய்வதாகவும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan
