நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கஸ்ஸப தேரர் மீது தொடுங்கள்! சுமந்திரன் மன்றில் நீண்ட சமர்ப்பணம்

Sri Lanka Police M A Sumanthiran Sri Lankan Peoples Law and Order
By Rakesh Apr 25, 2026 05:30 AM GMT
Report

யாழ். நாவற்குழி விகாரைக்குக் குடிதண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி மீது துஷ்பிரயோக முயற்சி மேற்கொண்டதாக கூறப்பட்ட பலாங்கொடை கஸ்ஸப தேரருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என சட்டத்தரணி கேசவன் சயந்தன் உட்பட்ட சாவகச்சேரி சட்டத்தரணிகள் குழுவின் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி நீண்ட சமர்ப்பணம் செய்துள்ளார்.

இந்த நடவடிக்கை நேற்று(24.04.2024) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ள முக்கிய போட்டிப்பரீட்சை - வெளியான காரணம்

மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ள முக்கிய போட்டிப்பரீட்சை - வெளியான காரணம்

சட்டத்தரணிகளின் அதிரடி நடவடிக்கை

இந்தச் சமர்ப்பணம் தொடர்பான முடிவையும் கஸ்ஸப தேரருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதா என்பது குறித்த தீர்மானத்தையும் அடுத்த வாரம் வழங்குவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேற்படி, நாவற்குழி விகாரைப் பிக்குவுக்கு எதிரான வழக்கை ஒட்டி, நகர்த்தல் பத்திரம் ஒன்றை மன்றில் சமர்ப்பித்து, இந்த விடயத்தை சட்டத்தரணி கேசவன் சயந்தன் நீதிமன்றத்தின் முன் கொண்டு வந்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கஸ்ஸப தேரர் மீது தொடுங்கள்! சுமந்திரன் மன்றில் நீண்ட சமர்ப்பணம் | Accusations Against Venerable Kassapa Thera

அத்துடன், ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் நேற்று(24) மன்றில் முன்னிலையாகி விடயங்களைச் சமர்ப்பணம் செய்துள்ளார். சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் பிரசன்னமாகி இருந்த பெரும்பாலான சட்டத்தரணிகள் இந்த சமர்ப்பணத்துக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துப் பதிவு செய்துள்ளனர்.

அவமதிப்பு விசாரணை

இது தொடர்பில் மேலும் சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில், இந்த விடயத்தில் சாவகச்சேரி நீதிமன்றம் மூலம் சதி செய்யப்பட்டு இருப்பதாகவும், தந்திரோபாயமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் பகிரங்கமாக கருத்து வெளியிட்டதன் மூலம் பலாங்கொடை கஸ்ஸப தேரர் இந்த நீதிமன்றை அதன் நடவடிக்கைகளை அவமதிப்பிற்கு உட்படுத்தி இருக்கின்றார்.

அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பு தொடர்பில் பூர்வாங்க தகவல்களை தருவதற்காக தேசிய பத்திரிகை ஒன்றில் இது தொடர்பாக வெளிவந்த செய்தியை ஆதாரமாக முன்வைத்துள்ளோம்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கஸ்ஸப தேரர் மீது தொடுங்கள்! சுமந்திரன் மன்றில் நீண்ட சமர்ப்பணம் | Accusations Against Venerable Kassapa Thera

நீதிமன்ற பணியாளர்கள் என்ற முறையில் சட்டத்தரணிகள் ஆகிய நாங்கள் இந்த விடயத்தை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்து நீதிமன்ற அவமதிப்பு விசாரணையைத் தொடங்கக் கோருகின்றோம். 'இத்தகைய விடயத்தில் நீதிமன்ற அவமதிப்பு இடம்பெற்றிருப்பதான தகவல் மன்றுக்குக் கிடைக்குமானால் நீதிமன்றமே தன் பாட்டில் நீதிமன்ற அவமதிப்பு விசாரணைக்கு உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்கலாம்.

அதனால் நீதிமன்றப் பணியாளர்களாகிய நாங்கள் இந்த விடயத்தை மன்றின் கவனத்துக்குக் கொண்டு வருகின்றோம்.

பலாங்கொடை கஸ்ஸப தேரர் மீதான குற்றச்சாட்டுக்கள்

இது வழமையான நீதிமன்ற அவமதிப்பு விவகாரம் அல்ல, அதையும் தாண்டியது. நீதிமன்றின் சட்ட ரீதியான செயற்பாட்டை வேறு உள்நோக்கோடு அர்த்தப்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி இது.

சம்பந்தப்பட்ட பிக்கு நாவற்குழி விகாரைக்கு மீண்டும் திரும்பி தமது சட்டபூர்வமான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று பலாங்கொடை கஸ்ஸப தேரர் கூறியிருக்கின்றார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கஸ்ஸப தேரர் மீது தொடுங்கள்! சுமந்திரன் மன்றில் நீண்ட சமர்ப்பணம் | Accusations Against Venerable Kassapa Thera

உண்மையில் சம்பந்தப்பட்ட நாவற்குழி பிக்கு சட்டபூர்வமற்ற வேலையைச் செய்த காரணத்தால் தான் நாவற்குழி விகாரைக்குச் செல்ல நீதிமன்றத்தால் அத்தகைய தடை விதிக்கப்பட்டிருக்கின்றது என்பதை மறைத்து, பலாங்கொடை கஸ்ஸப தேரர் நீதிமன்றை அவமதிப்புக்கு உட்படுத்தி இருக்கின்றார் என்றார்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் அடுத்தக் கட்ட நடவடிக்கை அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படும் என்று நீதிவான் எம்.ஐ.எவ்.றிஸ்மினா தெரிவித்துள்ளார்.    

திறைசேரியிலிருந்து மாயமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்

திறைசேரியிலிருந்து மாயமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர் ஒருவர் கைது


மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US