அதிகாரிகள் ஆதிக்கம் - ஜனாதிபதியின் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என குற்றச்சாட்டு
நாட்டிற்குள் மிகப்பெரியளவில் அதிகாரிகள் ஆதிக்கம் செயற்படுத்தப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக ஜனாதிபதியின் தீர்மானங்கள் கூட நடைமுறைப்படுத்தப்படுவதில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மக்கள் தற்போது பொருளாதார ரீதியாக கடும் அழுத்தங்களை எதிர்நோக்கி வருவதாகவும் பொதுமக்கள் அரசாங்கம் மீது வெறுப்படைந்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
வாராந்த சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் விதுர விக்ரமநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் வேலைகளை செய்திருந்தாலும் அவை மேலோட்டமாக தெரியவில்லை.
அரசாங்கத்திற்கு எதிராக பொய்கள் சமூகமயப்படுத்தப்பட்டுள்ளமையே இதற்கு காரணம்.
நவீன தொழிநுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் இதற்கு வழிவகுந்துள்ளன எனவும் விக்ரமநாயக்க மேலும் தெரிவித்துள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
