மீண்டும் அதிகரிக்கும் வாகன விபத்துக்கள்!
நாட்டில் மீண்டும் வாகன விபத்துக்களின் அதிகரிப்பை காணக்கூடியதாக உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கடந்த 18ம் திகதி மட்டும் வாகன விபத்துக்களில் 09 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதில் 03 பேர் 18ம் திகதி இடம்பெற்ற விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாகவும், 05 பேர் திங்கட்கிழமை (17) இடம் பெற்ற விபத்துக்களில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களெனவும் மற்றுமொருவர் சில தினங்களுக்கு முன் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவரெனவும் அவர் தெரிவித்தார்.
வாகன விபத்துக்களில் அநேகமானவை மோட்டார் சைக்கிள் விபத்துக்களாக காணப்படுவதாகவும், சீரற்ற காலநிலை காரணமாக இத்தினங்களில் வாகன விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார்.