பதுளை - பசறை பிரதான வீதியில் விபத்து
பதுளை பசறை பிரதான வீதியில் வெவ்வேறு இடங்களில் இரு வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இரு விபத்துக்களும் நேற்று (04) இரவு இடம்பெற்றுள்ளது.
பதுளை பசறை வீதியில் 10 ம் கட்டைக்கு அருகாமையில் பதுளையில் இருந்து பசறை நோக்கி வந்து கொண்டிருந்த லொறி ஒன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலதிக விசாரணை
விபத்துக்குள்ளான போது லொறியில் சாரதி மாத்திரமே பயணித்ததாகவும் சாரதிக்கு காயங்கள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது
மேலும் பசறை பதுளை வீதியில் 5 ம் கட்டைப் பகுதியில் பசறையிலிருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த பார ஊர்தி ஒன்று வீதியை விட்டு விலகி வீதியின் ஓரமாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கடவையில் மோதி விபத்துக்குள்ளகியுள்ளது.
விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது..
இந்நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |









Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri
