கட்டாக்காலி மாடுகளால் தொடர்ந்து அதிகரிக்கும் வாகன விபத்துகள்!
கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட நகர்ப்புறங்களில் கட்டாக்காலி மாடுகளால் ஏற்படும் வாகன விபத்துகள் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றன.
பொதுமக்கள் கோரிக்கை
இந்நிலையில், லொறி ஒன்ற (25) நேற்று இரவு கிண்ணியாவிலிருந்து தவிடு ஏற்றிக்கொண்டு கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் கந்தளாய் 91 மைல் கட்டை பகுதியில் மாடு ஒன்று குறுக்கே வந்ததால் விபத்துக்குள்ளானது.
கடந்த காலங்களில் இவ்வாறான அதிக விபத்துகள் பதிவாகியுள்ளன. கால்நடை உரிமையாளர்களின் பொறுப்பின்மை மற்றும் பிரதேச சபை அதிகாரிகளும் இதற்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், கால்நடை அதிகாரி, கால்நடைகளை வீதிகளில் விடுவதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |