பொலிஸாரின் கவனயீனத்தால் மாணவர் ஒருவருக்கு நேர்ந்த துயரம்
மாத்தறை நாவிமன பிரதேசத்தில் விசேட தேவையுடைய மாணவர் ஒருவரின் சிகிச்சைக்கு அவரது பெற்றோர்கள் உதவி கேட்டுள்ளனர்.
ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் குறித்த மாணவன் பொலிஸார் தவறுதலாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் தலையில் பலத்த காயம் அடைந்து முற்றாக விசேட தேவையுடையவராகியுள்ளார்.
விபத்து
இதனால் தற்போது ஹரிஷ் ஹன்சகவின் பெற்றோர்கள் தங்கள் குழந்தையை மீட்க உதவி கேட்டுள்ளனர்.
பிறவியிலேயே விசேட தேவையுடையவர் இல்லாத ஹரிஷ் ஹன்சகவுக்கு நேர்ந்த விபத்தால், இன்று பேசக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை வைத்தியர்களின் கடின பிரயத்தனத்தால் ஹன்சக இன்று இவ்வாறு வாழ்ந்து வருகின்றார் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் உள்ளூர் வைத்தியர் ஒருவர் அவருக்கு மேலும் சிகிச்சை அளிக்க விருப்பம் தெரிவித்தாலும், அதற்கு ஹன்சகவை அழைத்துச் செல்ல பெற்றோரால் முடியாத சூழ்நிலையே காணப்படுகிறது.
பொருளாதார சிக்கல்
கூலி வேலை செய்யும் தந்தைக்கு, 5 பேர் கொண்ட குடும்பத்தில் நோய்வாய்ப்பட்ட குழந்தையை குணப்படுத்துவது மிகவும் சவாலாக உள்ளதாக கூறப்படுகின்றது.
இதுவரை செய்த சிகிச்சையால், படுக்கையில் இருந்த ஹன்சக, தற்போது எழுந்து உட்காரும் நிலைக்கு வந்துள்ளார் என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவர் கிராம விகாரை ஊர்வலத்தில் காவடி ஆடுவதற்காக மயில் தோகை தேட சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.