இளைஞர் ஒருவரின் மோசமான செயலால் பலியான பெண்!
பலாங்கொடை நகரை அண்மித்த தொரவெல ஓயா பிரதேசத்தில் வயோதிப பெண்ணொருவரை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் பாடசாலை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 27ஆம் திகதி குறித்த வயோதிப பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிரேத பரிசோதனை
இதன்பின்னர் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் போது எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டது.
பிரேத பரிசோதனையில் அந்த பெண் பலமுறை தவறான உறவிற்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரித்து கொல்லப்பட்டமை உறுதியானது.
இந்நிலையில் சந்தேகநபரான 17 வயதுடைய மாணவன் பலாங்கொடை பதில் நீதவான் டி.எம்.சந்திரசேகர முன்னிலையில் முற்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபரின் உடல், உள மற்றும் சமூக நோய்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும், சந்தேகநபரை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
பலாங்கொடை முகுனமலை பிரதேசத்தில் வசித்த 78 வயதுடைய திருமணமான எம்.எல்.சிரியாவதி என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தை எதிர்கொண்ட பெண்ணின் மகன் கூறுகையில், "அம்மாவுக்கு செயற்கை பற்கள் பொருத்தப்பட்டிருந்தன.
"எனவே அவன் வாயை பலவந்தமாக மூடியதால் அந்த பற்கள் தொண்டையில் சிக்கிக்கொண்டன. கொடூரமாக சித்திரவதை செய்தே அம்மா கொலை செய்யப்பட்டுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 6 மணி நேரம் முன்

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ரித்திஷ்.. எல்லை மீறிய இனியா- ஆகாஷ்.. கொதிப்பில் குடும்பத்தினர் Manithan

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam
