சென்னையில் ஏற்படவிருந்த பாரிய விமான விபத்து: தடுத்து நிறுத்திய விமானி
பெஞ்சல் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற போது, நிலை தடுமாறிய விமானம் ஒன்றில் ஏற்படவிருந்த பாரிய விபத்தை விமானியின் சாதுரியத்தினால், தவிர்க்க முடிந்துள்ளது.
இது தொடர்பான காணொளி இணையத்தில் இப்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. விமான நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்த காணொளியின் படி, விமானம் ஒன்று தரையிறங்க முயல்கிறது.
எனினும், அதன் பின்பக்க சில்லு மாத்திரம் ஓடுதளத்தில் படும் நிலையில், விமானத்தால் ஒழுங்காகத் தரையிறங்க முடியவில்லை.
தரையிறக்கம்
இதன்போது, குறித்த விமானம், இடதுபுறம் நிலை தடுமாறி விபத்தில் சிக்கும் அளவுக்கு மோசமான நிலைக்குச் செல்கிறது. இருப்பினும், விமானியின் சாதுரியத்தினால், ஒருவாறு சமாளித்து மீண்டும் மேல் நோக்கி பறக்கிறது.

அதன்படி, வானிலை மோசமாக இருந்தமையால், விமானியால் விமானத்தைத் தரையிறக்க முடியவில்லை. எனவே, இறுதி நேரத்தில் அவர் விமானத்தை தரையிறங்கும் திட்டத்தைக் கைவிட்டுவிட்டு மீண்டும் விமானத்தை மேல் நோக்கி எடுத்து சென்றுள்ளார்.
இதன் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இடம்பெறவிருந்த மிக மோசமான விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
you may like this
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam