வவுனியாவில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : பொலிஸார் விசாரணை (PHOTOS)
வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
குறித்த விபத்து இன்று (04) மதியம் இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா நகரில் இருந்து ஹொரவப்பொத்தானை வீதி வழியாக சென்ற கார் ஒன்று ராணி மில் வீதியில் திரும்பிய போது பின்னால் வந்த பாரவூர்த்தி குறித்த காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளான கார் அப் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றின் முன்னால் நின்ற மோட்டர் சைக்கிளுடன் மோதியுள்ளது.
அத்துடன் கார் அருகில் இருந்த வர்த்தக நிலையத்திற்குள் புகுந்ததால் வர்த்தக நிலையத்தின் முன் பகுதியும் இடிந்து விழுந்து அதன் கூரைப் பகுதியும் சேதமைடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் கார் மற்றும் மோட்டர் சைக்கிள் என்பன சேதமடைந்துள்ளதுடன், விபத்துக்குள்ளான வாகனங்களை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.



1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 23 மணி நேரம் முன்
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri