யாழில் மோட்டார் சைக்கிள் மீது வான் மோதி விபத்து : பெண் ஒருவர் உயிரிழப்பு..!
யாழ்ப்பாணம் சுன்னாகம் சந்தியில் இருந்து காங்கேசன்துறை செல்கின்ற பக்கம் 100 மீற்றர்கள் தூரத்தில், ஹையேஸ் வாகனம் ஒன்று, வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (04) இடம்பெற்றுள்ளது.
விசாரணைகள்
ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இரண்டு பெண்களை ஹையேஸ் வாகனம் ஒன்று முந்திச் செல்ல முயன்ற வேளை ஹையேஸ் வாகனம் மோதியது.

இந்நிலையில் மோட்டார் சைக்கிளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த பெண்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சங்கானையைச் சேர்ந்த ஆனந்தன் சிவானந்தகௌரி (வயது 51) என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
|   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  | 

                                            
                                                                                                                                    
    
    
    
    
    
    
    
    
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
    
    ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri