ஈழத்தின் பிரசித்திபெற்ற செல்வச் சந்நிதியானுக்கு நாளை கொடியேற்றம்
ஈழத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா நாளை ஆரம்பமாகவுள்ளது.
நாளை மாலை 6.15 மணிக்கு
கொடியேற்றத்துடன் மஹோற்சவம் ஆரம்பமாகவுள்ளது.
எதிரவரும் 8 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 8 மணிக்கு விசேட பூஜைகள் இடம்பெற்று இரவு 7 மணிக்கு சதுர்த்தி விநாயகப் பெருமானுடன் முருகப் பெருமானும் எழுந்தருளவுள்ளார்.
தேர்த்திருவிழா
10 ஆம் திருவிழாவான பூங்காவன உற்சவம், எதிர்வரும் 13 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
கைலாச வாகன உற்சவம், 14 ஆம் திகதி புதன்கிழமை காலை 8 மணிக்கு இடம்பெறவுள்ளதுடன், சப்பறத் திருவிழா 17ஆம் திகதி சனிக்கிழமை இரவு 7 மணிக்கும், தேர்த்திருவிழா 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கும், தீர்த்தத்திருவிழா 19ம் திகதி திங்கட் கிழமை காலை 8 மணிக்கும் நடைபெறவுள்ளது.
பின்னர் தீர்த்தத்திருவிழா அன்று மாலை 6.30 மணிக்கு மௌனத் திருவிழாவுடன் வருடாந்த மஹோற்சவம் நிறைவு பெறும் என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மறுநாள் மகோற்சவ தினங்களில் சந்நிதி சுற்றாடலில் அமைந்துள்ள அன்னதான மடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
