திருகோணமலை கிண்ணியாவில் விபத்து : பொலிஸார் விசாரணை
திருகோணமலை கிண்ணியா வில்வெளி பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (27) இரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிண்ணியாவில் இருந்து சுரங்கல் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி நாய் ஒன்றுடன் மோதியதில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளில் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே பலத்த காயங்களுடன் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு விபத்துகுள்ளான நபர் கிண்ணியா இடிமண் பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.எப்.பாரூக் என்பவராவார்.
மேலும் விபத்து தொடர்பில் முச்சக்கர வண்டி சாரதி கைது செய்து செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது




திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan

12 ஆண்டுகளாக வேலையே செய்யாமல் ரூ.28 லட்சம் சம்பளம் வாங்கிய பொலிஸ்காரர்.., கண்டுபிடித்தது எப்படி? News Lankasri
