திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் விபத்து: சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி பூநகர், 20 ஏக்கர் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது இன்று (26.10.2023) இடம் பெற்றுள்ளது.
ஈச்சிலம்பற்றிலிருந்து சேறுநுவர நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
இந்த விபத்தில் மட்டக்களப்பை பிறப்பிடமாகக் கொண்ட பூநகர் சிவன்கோயிலில் பூசகராக பணி புரியும் கே.கஜரூபன் (34 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
