கண்டி - யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் கோர விபத்து
கண்டி - யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் மரக்கறி ஏற்றிச் சென்ற லொறியொன்றும் எரிபொருள் தாங்கி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்த லொறி சாரதி மற்றும் உதவியாளர் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
குறித்த விபத்தானது மிஹிந்தலை - பலுகஸ்வெவ பகுதியில் இன்று (20) அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மரக்கறி லொறியின் சாரதி மற்றும் லொறியின் உதவியாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
யாழ்ப்பாணம் பகுதியில் இருந்து தம்புள்ளை பொருளாதார நிலையத்திற்கு மரக்கறி ஏற்றிச் சென்ற மரக்கறி லொறியானது வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கியின் பின்புறம் மோதியதில் மரக்கறி லொறி வீதியில் கவிழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |