மன்னார் பிரதான வீதியில் விபத்து - ஒருவர் காயம்
மன்னார் - மதவாச்சி பிரதான வீதி,முருங்கன் பொலிஸ் பிரிவில் சிறிய ரக மகிழுந்து விபத்திற்குள்ளாகியதில் அதன் சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. மன்னாரிலிருந்து மாதவாச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த குறித்த சிறிய ரக மகிழுந்து இசை மாலைத்தாழ்வு பகுதியில் விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த வாகனத்தைச் செலுத்தி வந்த சாரதிக்கு நித்திரை ஏற்பட்டமையினால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
குறித்த பகுதியில் பிரதான வீதியின் இடது பக்கமுள்ள மரமொன்றுடன் மோதி தொடர்ந்து மற்றுமொரு பெரிய மரத்தில் மோதி மகிழுந்து நின்றுள்ளதாக விபத்தை நேரடியாகப் பார்த்த அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த விபத்தில் காயமடைந்த சாரதி மீட்கப்பட்டு மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.