கிளிநொச்சி A9வீதியில் விபத்து: இருவர் காயம் (Video)
கிளிநொச்சி நகரின் A9 வீதியில் இன்று பகல் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி பயணிகளுடன் பயணித்த அரசு பேருந்துடன், அதே திசையில் பயணித்த முச்சக்கர வண்டி பின் பகுதியில் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
பேருந்து தரிப்பிடத்தில் தரிக்க முற்பட்ட பொழுது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் முச்சக்கரவண்டி பலமாக சேதம் அடைந்துள்ளதுடன், அதில் பயணித்த இருவர் சிறுகாயங்களிற்கு உள்ளாகியுள்ளனர்.
விபத்து இடம்பெற்ற நேரம் அதிக போக்குவரத்து நெரிசல் அப்பகுதியில் காணப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026