கொழும்பு-குருநாகல் பிரதான வீதியில் விபத்து! மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட 12 பேர் வைத்தியசாலையில்
கொழும்பு-குருநாகல் பிரதான வீதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தொன்றில் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நாரம்மலை, மினுவாங்கொடை ஊடான வழித்தட இலக்கம் 05, கொழும்பு-குருநாகல் பிரதான வீதியின் நால்ல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக சிகிச்சை
ட்ரக் வண்டியொன்றும், இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 12 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் தற்போதைக்கு தம்பதெனிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, சிறுமியொருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக குருநாகல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுகின்றவர்களில் பேருந்து சாரதி, ட்ரக் வண்டி சாரதி ஆகியோரும் உள்ளடங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 45,000 இந்திய மாணவர்கள்: எச்சரிக்கும் கல்வித்துறையினர் News Lankasri