அம்பாந்தோட்டையில் டிப்பர் வாகனம் மோதி கோர விபத்து - சாரதிக்கு நேர்ந்த துயரம்
திஸ்ஸ - மாத்தறை பிரதான வீதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று(18.05.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
அம்பாந்தோட்டை - பூந்தல சந்திக்கு அருகாமையில் அதிவேகமாகப் பயணித்த டிப்பர் வாகனம் ஒன்றும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளாகின.
கோர விபத்தில் சாரதி பலி
இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
விபத்து தொடர்பாக டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 17 மணி நேரம் முன்
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam