பாடசாலை மாணவன் ஓட்டிச் சென்ற முச்சக்கரவண்டியால் ஏற்பட்ட விபரீதம்
நாவலப்பிட்டியில் பாடசாலை மாணவன் ஓட்டிச் சென்ற முச்சக்கரவண்டி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
சாரதியான மாணவன் உட்பட ஏனைய மாணவர்களும் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கினிகத்தேனை - நாவலப்பிட்டி பிரதான வீதியில் கினிகத்தேன நூலகத்திற்கு அருகில் நேற்று பிற்பகல் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலை மாணவர்கள்
கினிகத்தேன கடவல தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களே விபத்தில் காயமடைந்துள்ளனர்.
பாடசாலையில் நடைபெற்ற விழாவை முடித்துக்கொண்டு நான்கு மாணவர்களும் முச்சக்கரவண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
முன்னால் சென்ற வேனை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர் திசையில் இருந்து வந்த பேருந்தில் மோதாமல் தடுக்க முயற்சித்த நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
பேருந்து விபத்து
இதனால் பின் இருக்கையில் பயணித்த மூன்று மாணவர்களும் பிரதான வீதியில் வீழ்ந்ததாகவும், வீதியில் கிடந்த மூன்று மாணவர்களைக் காப்பாற்றுவதற்காக பேருந்தை சாரதி வீதியை விட்டு விலகிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அருகில் இருந்த கட்டிடத்தின் சுவரில் மோதி பேருந்து நின்றது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
முச்சக்கரவண்டியை செலுத்தி வந்த பாடசாலை மாணவனின் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் என விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
