கந்தளாயில் உழவு இயந்திரமும் லொறியும் மோதி விபத்து:ஒருவர் படுகாயம்
கந்தளாய்-சேருநுவர வீதியில் உழவு இயந்திரத்துடன் லொறி ஒன்று நேருக்கு நேர் மோதியதில், உழவு இயந்திரச் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
குறித்த விபத்தானது நேற்றையதினம்(28) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து குறித்து மேலும் தெரியவருகையில், கந்தளாய் பேராறு பகுதியிலிருந்து உழவு இயந்திரம் ஒன்று வயல் உழவுப் பணிகளுக்காக சேருநுவர வீதி வழியாகச் சென்று கொண்டிருந்தது.
மேலதிக விசாரணை
அதேவேளை, சேருநுவர கல்லாறு இராணுவ முகாமுக்கு உணவு விநியோகம் செய்துவிட்டு கொழும்பு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த லொறி ஒன்று, கந்தளாய்-சேருநுவர வீதியில் எதிர்பாராத விதமாக உழவு இயந்திரத்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

இந்த விபத்தினால் உழவு இயந்திரம் பலத்த சேதமடைந்துள்ளதுடன், அதனைச் செலுத்திய சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவம் குறித்து கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.