வெளிநாடு செல்ல காத்திருந்த இளம் தந்தைக்கு நேர்ந்த துயரம்
கேகாலை - யட்டியந்தோட்டை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கேகாலையிலிருந்து பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவிசாவளையிலிருந்து வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்த விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்து கரவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொட்டியகும்புர பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வெளிநாடு செல்வதற்கு தேவையான ஆவணங்களை தயாரிக்க சென்றபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் குறித்து ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam