வவுனியாவில் வீதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் (Video)
வவுனியா - தாண்டிக்குளம் பகுதியிலிருந்து இன்று (10.01.2023) காலை பொலிஸ் உத்தியோகத்தரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தாண்டிக்குளத்திலிருந்து புதுக்குளம் செல்லும் பிரதான வீதியில் தாண்டிக்குளம் சந்தியிலிருந்து 500 மீட்டர் தொலைவிலுள்ள வளைவிற்கு அண்மித்த பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் சடலம் ஒன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில் குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தாரா?
விபத்தின் காரணமாக இந்த மரணம் சம்பவித்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் மிகிந்தலை பகுதியினை சேரந்த பொலிஸ் உத்தியோகத்தர் வசந்த சந்தன நாயக்க (வயது 45) என்பரே சடலமாக மீட்கப்பட்டுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - திலீபன்





பதினாறாவது மே பதினெட்டு 5 மணி நேரம் முன்

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
