கனகராயன் குளத்தில் துவிச்சக்கர வண்டியில் சென்றவரை மோதிய கென்ரர் வாகனம்; ஒருவர் பலி!
வவுனியா - கனகராயன்குளம், கொல்லர்புளியங்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
யாழில் இருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த கென்ரர்ரக வாகனம் கொல்லர்புளியங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபருடன் மோதி விபத்திற்குள்ளாகியது.
பொலிஸ் விசாரணை
விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த முத்து இராமலிங்கம் என்ற 61வயது குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பாக கனகராஜன்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
