வட்டக்கச்சி - புதுப்பாலம் பகுதியில் விபத்து: ஒருவர் பலி
கிளிநொச்சியில் இளம்பெண் ஒருவரைக் கடத்திச் சென்றதாகத் தெரிவிக்கப்படும் கனரக வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
வட்டக்கச்சி - புதுப்பாலம் பகுதியில் அதி வேகமாக வந்த கனரக வாகனம் வாய்க்கால் ஒன்றுக்குள் தடம் புரண்ட சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இளம்பெண் ஒருவர் உட்பட இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதேவேளை,குறித்த கனரக வாகனத்தினை சிலர் மோட்டார் சைக்கிள்களில் துரத்திச் சென்றதாகவும், அதன் போதே கனரக வாகனச் சாரதி அதிவேகமாக வாகனத்தைச் செலுத்தியதால் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளாகியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் கிளிநொச்சி நாகேந்திரபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயதான டிலக்சன் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
வாகனத்தில் கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் 23 வயதுடைய இளம் பெண் படுகாயம் அடைந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இது குறித்து கரவெட்டித்திடல் பகுதியைச் சேர்ந்த குறித்த பெண்ணின் குடும்பத்தார் எனத் தெரிவிக்கும் நபர்கள் தெரிவிக்கையில், தம்முடைய பெண்ணை சில நபர்கள் கனரக வாகனத்தில் கடத்திச் சென்றதாகவும் அவர்களை தாங்கள் விரட்டிச் சென்றதாகவும் தப்பிக்க முற்பட்ட கனரக வாகனமே விபத்துக்குள்ளானதாகவும் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளைக் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.


உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
குணசேகரன் செய்த விஷயத்தால் பெண்கள் உச்சக்கட்ட அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
எதிர்நீச்சல் சீரியலில் ஏற்பட்ட மரணம்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam