திருகோணமலையில நடந்த கோர விபத்து: இளைஞர் உயிரிழப்பு - பெண் படுகாயம்
திருகோணமலை - கப்பல்துறை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று(19.04.2026) இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை - நடேசன் கோயில் அடியில் வசித்து வரும் எஸ். நிரோஜன் (வயது 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
இவர், பயணித்த மோட்டார் சைக்கிளும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இளைஞர் பலி - பெண் படுகாயம்
இதன்போது, மோட்டார் சைக்கிளில் பின்னால் பயணித்த கப்பல்துறை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஜீவராணி என்ற பெண் பலத்த காயமடைந்துள்ளார். அவரது கை உடைந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பாக வான் சாரதியைக் கைது செய்துள்ள சீனக்குடா பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 8 மணி நேரம் முன்
சொந்த ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan