திருகோணமலையில் சிறிய ரக வான் ஒன்று மரமொன்றுடன் மோதி விபத்து!
திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநகர் பகுதியில் சிறிய ரக வான் ஒன்று மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது இன்று(27.6.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் வானில் பயணித்த வவுனியா - பட்டாணிச்சூடு பகுதியைச் சேர்ந்த 35,17 வயதுகளையுடைய இருவரே படுகாயம் அடைந்து ஈச்சிலம்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
வவுனியாவிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த வானின் சாரதியின் தூக்க கலக்கத்தினால் வான் பாதையை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வருகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.