பளையில் விபத்து - இருவர் படுகாயம்
கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
அவ் இருவரும் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காகக் காயமடைந்த இருவரும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சியிலிருந்து யாழ் நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியை, யாழிலிருந்து மின்கம்பங்கள் ஏற்றிவந்த வாகனம் மோதியுள்ளது.
மின்சார சபை வாகனம் மற்றுமொரு வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டபோதே முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரே படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளைப் பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.









அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
