நீர்கொழும்பில் கோர விபத்து! தந்தையும் மகனும் பரிதாபமாக பலி (photos)

Colombo Puttalam Negombo Hospitals in Sri Lanka Accident
By Rakesh Jun 18, 2022 11:50 AM GMT
Report

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் நீர்கொழும்பு - பெரியமுல்ல பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

புத்தளம், நூர்நகர் பகுதியைச் சேர்ந்த 57 வயதான முஹம்மது சமூன் மற்றும் அவரது 12 வயதான மகன் முஹம்மது ஹமாஸ் ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு புத்தளத்திலிருந்து கொழும்பை நோக்கி வந்த முச்சக்கரவண்டி ஒன்றும், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் பயணிகள் சேவை பேருந்து ஒன்றும் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நீர்கொழும்பில் கோர விபத்து! தந்தையும் மகனும் பரிதாபமாக பலி (photos) | Accident In Negombo Father And Son Die Tragically

இதன்போது முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற தந்தையும், பின்னால் இருந்து பயணம் செய்த 12 வயதுடைய மகனும் படுகாயமரடைந்த நிலையில், அங்கிருந்தவர்களால் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும், ஓட்டோவைச் செலுத்திச் சென்ற தந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், முச்சக்கரவண்டியின் பின்னால் இருந்து பயணம் செய்த 12 வயதான மகன் ஆபத்தான நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட போதிலும், இன்று காலை அந்தச் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர்கலின் ஜனாஸாக்கள் பிரேத அறையில்

உயிரிழந்த தந்தை மற்றும் மகன் ஆகியோரது ஜனாஸாக்கள் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

பிரேத பரிசோதனையின் பின்னர் ஜனாஸாக்கள், உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பில் கோர விபத்து! தந்தையும் மகனும் பரிதாபமாக பலி (photos) | Accident In Negombo Father And Son Die Tragically

இவ் விபத்தில் குறித்த முச்சக்கரவண்டியின் முன் பக்கம் முழுமையாகச் சேதமடைந்துள்ளது. விபத்துடன் தொடர்புடைய தனியார் பஸ்ஸின் சாரதி , விபத்தை ஏற்படுத்திவிட்டு அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்று பொலிஸில் சரணடைந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விற்பனை செய்யும் நோக்கில் ஒரு தொகை மரவெள்ளிக் கிழங்குகளை ஓட்டோவில் ஏற்றிக்கொண்டு புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கி வந்தபோதே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மேற்படி இருவரும் விபத்தில் சிக்கிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துச் சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகைள மேற்கொண்டு வருகின்றனர்.   

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US