மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி(Video)
மன்னார் - மதவாச்சி பிரதான வீதி இசைமாலைதாழ்வு பகுதியில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கட்டுப்பாட்டை இழந்த வாகனம்
மன்னார் நோக்கி சென்று கொண்டிருந்த வட்டா ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் சாரதிக்கு அருகில் இருந்து பயணித்தவர் பலியாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயக்க நிலையில் மீட்பு
வாகனத்தை செலுத்தி சென்ற சாரதிக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லையெனவும்,
அவர் மயக்க நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து முருங்கன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
