ஹட்டனில் விபத்து - மூவர் காயம்
ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், இரண்டு வயது குழந்தை உட்பட மூவர் காயமடைந்த நிலையில் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹட்டனிலிருந்து மஸ்கெலியாவுக்கு சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும் மஸ்கெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த தனியார் பஸ்ஸும், டிக்கோயா வனராஜா பகுதியில் நேருக்கு நேர் மோதி கொண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த முச்சக்கரவண்டி, வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துடன் தொடர்புடைய முச்சக்கரவண்டி சாரதியை கைது செய்துள்ள ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam