ஹட்டனில் சாரதியின் தவறால் கட்டுப்பாட்டை இழந்த லொறி
ஹட்டன் நகரில் தனியார் வர்த்தக நிலையமொன்றுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியை, வேறு இடத்திற்கு மாற்றி நிறுத்துவதற்கு முற்பட்டவேளை, சாரதியின் கவனக்குறைவால் விபத்துக்குள்ளாகியுள்ளது.
லொறியை இயக்கியபோது, பிரேக்கிற்கு (Braking system) பதிலாக சாரதி தவறுதலாக எக்ஸிலரேட்டரை (Accelerator) மிதித்ததால், லொறி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக முன்னோக்கி சென்றுள்ளது. பின்னர் மின் கம்பத்துடன் மோதி நின்றுள்ளது.
இச்சம்பவம் நேற்று (11) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
லொறிக்கு பலத்த சேதம்
லொறி விபத்துக்குள்ளான தருணத்தில், லொறிக்கு அருகாமையில் பெண் ஒருவர் பாதையில் நடந்து சென்றுகொண்டிருந்துள்ளார்.

லொறி கீழே கவிழ்ந்திருந்தால் அந்தப் பெண்ணும் விபத்தில் சிக்கியிருக்கக் கூடும்.
இந்த விபத்தில் லொறிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், வேறு எவருக்கும் காயங்கள் எதுவுமின்றி பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.







பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri