கினிகத்தேனை - கடவளை பகுதியில் கனரக வாகனம் விபத்து
வெலிமடை பகுதியிலிருந்து கொழும்புக்கு உருளைக்கிழங்குகளை ஏற்றிச்சென்ற கனரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை கடவளை பகுதியில் வைத்து, குறித்த கனரக வாகனம் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று காலை 6.30 மணியளவில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக கினிகத்தேனை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதியின் கவனயீனமே விபத்துக்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாரின் விசாரணைகள்
லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், எனினும் உதவியாளர் படுங்காயங்களுக்குள்ளாகி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த லொறியில் இருந்த உருளைக்கிழங்கு வகைகளை பிரதேச மக்களின் உதவியுடன் மற்றுமொரு லொறிக்கு ஏற்றிச்செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
