மட்டக்குளியில் கோர விபத்து: இருவர் பலி - வெளியான சிசிடிவி காட்சிகள்
புதிய இணைப்பு
கொழும்பு மக்களைத் துக்கத்தில் ஆழ்த்திய மட்டக்குளியில் இடம்பெற்ற விபத்தில், கார் எவ்வாறு மற்ற வாகனங்கள் மீது மோதியது என்பதைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
மூன்றாம் இணைப்பு
விபத்தை பார்வையிட வந்தவர்களை விலக்கி விட்டு சம்பவ இடத்தை பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
ஏனெனின், கோபத்தில் சிலர் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை உடைத்து எரிப்பதற்கு முயற்சித்துள்ளனர்.
இதனை தடுக்கும் வகையில் பொலிஸார், பொது மக்கள் அனைவரையும் அந்த இடத்தில் இருந்து அகற்றியுள்ளனர்.

இரண்டாம் இணைப்பு
விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இருவர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் இருப்பவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், பலி எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
கொழும்பு - மட்டக்குளி பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று (16.09.2026) பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவர் உயிரிழப்பு
சற்றுமுன்னர், மட்டக்குளி பகுதியில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதில், இருவர் உயிரிழந்துள்ளதுடன், படுகாயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2 மோட்டார் சைக்கிள்கள், 2 முச்சக்கர வண்டிகள் மற்றும் கார் ஆகிய வாகனங்களே இவ்வாறு ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



