மட்டக்களப்பில் விபத்து - சம்பவ இடத்திலே உயிரிழந்த பொலிஸ் அதிகாரி
பொலன்னறுவை வாழைச்சேனை பிரதான வீதியிலுள்ள புனானை பகுதியில் பேருந்துடன் மோட்டர்சைக்கிள் மோதிய விபத்தில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸாரின் நடவடிக்கை
இந்த சம்பவம் நேற்று முன்தினம் (24) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது பேருந்து சாரதியை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தளையைச் சேர்ந்த 35 வயதுடைய அசங்க என்ற பொலிஸ் அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம்
வாழைச்சேனையில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் குறித்த நபர் விடுமுறையில் வீடு சென்று கடமைக்காக சம்பவதினதன்று 6 மணியளவில் மோட்டர்சைக்கிளில் வாழைச்சேனை நோக்கி சென்றுள்ளார்.
இதன்போது புனானை வாகனேரி சந்திக்கு அருகாமையில் வாழைச்சேனையில் இருந்து பொலன்னறுவை நோக்கி பிரயாணித்த இலங்கை போக்குவரத்து வண்டியுடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த பொலிஸ் அதிகாரி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து உயிரிழந்தவரை உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதுடன் பேருந்து சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.





7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
