பதுளையில் பேருந்துடன் முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் பலி
பதுளை (Badulla) - மஹியங்கனை வீதியில் புவக்கொடமுல்ல பிரதேசத்தில் இ.போ.ச பேருந்து ஒன்று முச்சக்கரவண்டியுடன் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (10.05.2024) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
தெஹியத்தகண்டியவில் இருந்து பதுளை நோக்கிப் பயணித்த இ.போ.ச பேருந்து ஒன்று பதுளையிலிருந்து ரிதிபனை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த 79 வயது நபரொருவரே உயிரிழந்துள்ளதார்.

மேலும், விபத்தின் போது பெண்ணொருவரும் மூன்று நபர்களும் காயமடைந்துள்ள நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சாணக்கிய நீதிப்படி கணவன் மனைவியிடம் மறைத்து வைக்க வேண்டிய 4 முக்கிய விடயங்கள்... என்னென்ன தெரியுமா? Manithan
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam