யாழில் கோர விபத்து: பரிதாபமாக உயிரிழந்த பெண்
யாழ். நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இவ் விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பயணித்த பெண் ஒருவர், ஏ-9 வீதி நாவற்குழி பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளார்.
இறங்கிய பெண் வீதியோரமாக இருந்த மண் பிட்டியில் கால் வைத்தபோது கால் தடுமாறி பேருந்து சக்கரத்திற்குள் விழுந்துள்ளார். குறித்த பெண் வீதியில் விழுந்ததை கவனிக்காமல் பேருந்து அங்கிருந்து புறப்பட்டது.
இதன்போது பெண்ணின் தலை பேருந்தின் பின்பக்க சில்லில் நசியுண்டது . உடனடியாக மீட்கப்பட்ட பெண் பட்டரக வாகனத்தின் உதவியுடன் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சடலம் சாவகச்சேரி வைதியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
You May Like This Video
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 20 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam