வெலிகந்த தொடருந்து விபத்து: சாரதிக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
வெலிகந்த - செவனப்பிட்டிய தொடருந்துக் கடவையில் 2009 ஆம் ஆண்டு மே 16ஆம் திகதி 15 பயணிகளின் உயிர்களை காவுகொண்டும், 40 பேர் படுகாயமடைந்த கோர விபத்துக்கு காரணமான பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதி சாரதிக்கு மரண தண்டனை விதித்து பொலன்னறுவை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
எனினும் இறுதியாக 2022, ஆகஸ்ட் 05 ஆம் திகதி, அன்று நீதிமன்றத்தில் முன்னிலையான சாரதி, அடுத்தடுத்த விசாரணைகளில் கலந்து கொள்ளத் தவறியதால், அவரைக் கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
தொடருந்துடன் மோதிய விபத்து
இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் முன்னிலையாவதை தவிர்த்துவந்த நிலையில் வெலிகந்த பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் வாழைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

வாழைச்சேனை அல்-ஹிஸ்மா சிறுவர் பள்ளியைச் சேர்ந்த பிள்ளைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் உட்பட 70 பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று தொடருந்துக் கடவையில் தொடருந்துடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது.
சமிஞ்சைகளை பொருட்படுத்தாமல் குறித்த சாரதி தொடருந்து கடவையைக் கடந்து செல்ல முயன்றதால் இந்த கோர விபத்து ஏற்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        