மட்டக்களப்பில் வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையால் ஏற்பட்ட விபத்து: இருவர் படுகாயம்
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (06.06.2023) இடம்பெற்றுள்ளது.
களுதாவளையிலிருந்து செட்டிபாளையம் நோக்கு வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் வேகத்தினை கட்டுப்படுத்தமுடியாமல் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
வேகத்தினை கட்டுப்படுத்தமுடியாத நிலையிலேயே குறித்த விபத்து சம்பவம்
இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார்
முன்னெடுத்துவருகின்றனர்.
பிரித்தானியாவில் 2 கோடி குடும்பங்களுக்கு £100 ஆற்றல் மானியம்: சான்சலர் ஜான் ஹீலி அறிவிப்பு News Lankasri
பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்கிய ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam