திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் விபத்து: ஒருவர் பலி
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் சீனக்குடா பகுதியில் நேற்று (17.03.2026) மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 40 வயதான குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கிண்ணியா பகுதியிலிருந்து பயணித்த மோட்டார்சைக்கிள், எதிரே வந்த டிப்பர் ரக வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றது.
வைத்தியசாலையில் அனுமதி
விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்தார். விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து உடனடியாக மீட்கப்பட்டு திருகோணமலை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதிலும், துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.